புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Wednesday, August 15, 2012

அக்டோபர் 26ல் விண்டோஸ் 8


        வரும் அக்டோபர் 26ல் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இது தனியாக வழங்கப்பட மாட்டாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் வழியாகக் கம்ப்யூட்டர்களில் பதிந்தே வெளியிடப்படும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும். அதனை மற்ற மதர்போர்டு உள்ள கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. எனவே இன்னொரு புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் என எண்ணினால், புதிய விண்டோஸ் 8 ஒன்று வாங்க வேண்டியதிருக்கும்.
ஏற்கனவே உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திட விரும்புபவர்களுக்கு, அதற்கான கட்டணமாக 40 டாலர் செலுத்திய பின்னர், உரிமம் வழங்கப்படும். மூன்று வாரங்களுக்கு முன்னர், அக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நாள் குறிக்காமல், மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.
இப்போது சரியாக என்று கிடைக்கும் என தன் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதன் சாப்ட்வேர் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தினை உண்டாக்கப் போகிறது. முதல் முறையாக இரு வேறு வகை கம்ப்யூட்டர் சாதனங்களில் இயங்கும் வகையில் ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் வழங்க இருக்கிறது. டெஸ்க்டாப் மற்றும் டேப்ள்ட் பிசி மட்டுமின்றி, விண்டோஸ் போனிலும் இது இயங்கும். மைக்ரோசாப்ட் அறிவித்த சர்பேஸ் டேப்ளட் பிசியும் இதனுடன் சேர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
2011ல் நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான கண்காட்சியில், விண்டோஸ் 8 குறித்த திட்டவரைவை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. சிப் ஒன்றில் இது சிஸ்டமாகக் கிடைக்கும் எனக் கூறிய போது, அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். அடுத்து ஜூன் 1, 2011 அன்று கம்ப்யூட்டக்ஸ் 2011ல் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. அன்று அறிவிக்கப்பட்ட விண்டோஸ் மெட்ரோ இன்டர்பேஸ், மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. அதே நேரத்தில் பழையவகை விண்டோஸ் திரையும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் அதிவேகமாக விண்டோஸ் 8 பூட் ஆகும்; யு.எஸ்.பி. 3 கிடைக்கும்; விண்டோஸ் ஸ்டோருக்கான இணைப்பு தரப்படும்; யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் இயக்கலாம் என்ற புதிய தகவல்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8, இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது என்ற செய்தியுடன், ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்த பல செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில், ஆய்வமைப்பு வெளியிட்ட செய்தியில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எதிர்பார்ப்பதால், தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கத் திட்டமிடுபவர்கள், தங்கள் முடிவை சற்று ஒத்தி போட்டுள்ளனர். இதனால், பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை உலக அளவில் சரியத் தொடங்கி உள்ளது. இதற்குக் காரணம் விண்டோஸ் 8 வர்த்தக வெளியீட்டிற்கான தேதி அறிவிப்பு மட்டுமல்ல. அதன் ரிலீஸ் பிரிவியூ காட்டியுள்ள பல புதிய வசதிகளும் தான்.
மேலும் நோட்புக் கம்ப்யூட்டர் விற்பனை உச்சகட்டத்தினை அடைந்து இப்போது அவ்வளவாக விரும்பப்படுவதில்லை. புதியதாக விண்டோஸ் 8 என்ன தரும் என இதனைப் பயன்படுத்துபவர்கள் காத்திருக்கின்றனர்.
கம்ப்யூட்டர் விற்பனை செய்பவர்களும், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர இருப்பதால், தங்களிடம் உள்ள பெர்சனல் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டர்களின் இருப்பு எண்ணிக்கையினைக் குறைக்க விரும்பி, செயலில் காட்டி வருகின்றனர்.
உலக அளவில் மொத்த கம்ப்யூட்டர் விற்பனை கடந்த மூன்று மாதங்களில், சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 0.1 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், இதே காலத்தில், லெனோவா தன் கம்ப்யூட்டர் விற்பனையை உயர்த்தியுள்ளது. 25% கூடுதல் விற்பனையுடன், மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. முதல் இடத்தை எச்.பி. கம்ப்யூட்டர்கள் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தாலும், இந்த சந்தையில் இவற்றின் விற்பனைப் பங்கு 17.6 சதவிகிதத்திலிருந்து 15.5%க்கு இறங்கியது. அசூஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை 39.8% உயர்ந்தாலும், ஐந்தாவது இடத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினைத் தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அளித்திடும் நிறுவனங்களிடம் இருந்து, லைசன்ஸ் ஒன்றுக்கு 100 டாலர் மைக்ரோசாப்ட் கட்டணமாக விதித்திருந்தது.
இதனைத் தற்போது குறைத்துள்ளதாக, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்டோஸ் ஆர்.டி. பதிந்த கம்ப்யூட்டர்களுக்கான உரிமக் கட்டணம் 80 முதல் 100 டாலராகவும், எக்ஸ்86 பதிப்புக்கு 60 முதல் 80 டாலராகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விண்டோஸ் 8 பதிந்து விற்பனை செய்திட, ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்களின் லாபம் அதிகமாகும். இதனால், அவை கம்ப்யூட்டர் விற்பனை விலையைக் குறைக்கலாம்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner

x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner